கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலய 2003 ஆம் ஆண்டு க.பொ.த.சாதாரண தர மாணவர்களால் 120,000/= அன்பளிப்பு
கனமூலை பெரிய பள்ளி, தாருஸ்ஸலாம் நலன் புரிச் சங்கம்இனைந்து ஜனாஸா வாகனமொன்றை கொள்வனவு செய்வதற்கு ஏற்பாடு செய்து வருகின்றனர்.
அந்தவகையில் கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலய 2003 ஆம் ஆண்டு க.பொ.த.சாதாரண தர மாணவர்கள் ஒன்றினைந்து சுமார் 120,000/= ரூபாவினை ஜனாஸா வாகன கொள்வனவிற்காக அன்பளிப்பு செய்துள்ளனர்.
2003 ஆம் ஆண்டு (O/L) மாணவர்கள் வருடா வருடம் தொடர்ந்து இவ்வாறான பொதுப் பணிகளில் அதிக ஈடுபாடு காட்டி வருவதோடு கடந்த மாதம் கோவிட்-19 கொரோனா அசாதாரண காலங்களில் உலர் உணவுப் பொதிகள் மற்றும் ஜனாஸா குளிப்பாட்டும் மேசை என்பன வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments