ஹிஜ்ரி 1441ம் ஆண்டுக்கான ஹஜ் அனுமதி வெளிநாடுகளுக்கில்லை
இவ்வருடம் ஹஜ் செய்வதற்காக சவூதி அரேபியாவில் வாழும் பல்வேறுபட்ட நாட்டு மக்களுக்கு மாத்திரம் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு அனுமதியளித்துள்ளதாக ஹஜ் அமைச்சு அறிவித்திருக்கும் அதே வேளை வெளிநாடுகளிலிருந்து இம்முறை ஹஜ் செய்வதற்கு அனுமதியில்லையெனவும் தெரிவித்துள்ளது.
சர்வதேச சுகாதார ஒழுங்குகளை கடைப்பிடித்தல், உயிர்களைப் பாதுகாத்தல், குறிப்பாக இறைவனது விருந்தாளிகளான ஹாஜிகளை பாதுகாத்தல் போன்ற இன்னோரன்ன நோக்கங்களை கவனத்திற்கொண்டு சன நெரிசலைக் குறைத்து, ஹஜ் கடமை இம்முறை விடுபடாமல் இருப்பதற்காக மேற்குறித்த முடிவை தூரநோக்குடன் சவூதி அரசாங்கம் எடுத்துள்ளது.
Azhan Haneefa
No comments