Breaking News

மேற்கு ஐரோப்பாவில் ஹிஜாப் அணிந்த நிலையில் நியமிக்கப்பட்டுள்ள முதலாவது முஸ்லீம் பெண் நீதிபதி

பிரித்தானியாவின் பிரதம நீதியரசர் (Lord of Chancellor/ Chief Justice) அவர்களால் மிட்லண்ட்  சுற்று நீதி நிர்வாக வலயத்தின் (Midland Circuit Court) துணை நீதிபதியாக கௌரவ ராபியா அர்ஸாட் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கு ஐரோப்பாவில் ஹிஜாப் அணிந்த நிலையில் நியமிக்கப்பட்டுள்ள முதலாவது முஸ்லீம் பெண் நீதிபதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பெண் நீதிபதியானது குறித்து பிரஸ்தாபிக்க இங்கு எதுவுமில்லை ஆயினும்  ஹிஜாப் எனும்  இஸ்லாமியப்பெண்களின் அடையாள ஆடைக்கு எதிராக ஐரோப்பாவில் அவ்வப்போதும்  தொடராகவும் எழுப்பப்படும் குரல்களுக்கு மத்தியில் ஒரு இஸ்லாமியப்பெண் ஹிஜாப் அணிந்த நிலையில் அதுவும் நீதித்துறை உயர் அதிகாரியாக நியமனம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

சகோதரி ராபியா அர்ஸாட் நொட்டிங்ஹாம் சென் மேரி குடும்ப சட்ட கழகத்தின் (St.Mary's Family Law Chamber) அங்கத்தவராக இருப்பதுடன் கடந்த பதினேழு வருடங்களாக குடும்பச் சட்டம் சார்ந்து வழக்குகளில் ஆஜராகி வருகின்றார்.

சென் மேரிஸ் குடும்பச் சட்டக் கழகம் என்பது லண்டனுக்கு வெளியில்  1999 ம்  ஆண்டு தாபிக்கப்பட்ட முதலாவது குடும்பச் சட்டக்கழகம் (Family Law Chamber ) என்பதுடன் சுமார் நாற்பது பரிஸ்டர்களைக் கொண்டு இயங்குகிறது. குறித்த இந்தக் கழகமானது பிரித்தானியாவில் வளர்ச்சியடைந்துவரும் சேவைநாடிகளுக்கு அர்ப்பணமிக்க சேவைகளை வழங்கும் சேவைநோக்கமிக்க ஒரு நிறுவனமாகும்.

மூன்று பிள்ளைகளின் தாயான வர தனது ஆரம்பக்கல்வியை  மேற்கு யோக் ஷெயாரில் ( West Yorkshire) பெற்றுக்கொண்டதுடன் இவரது குடும்பத்தில் இவரே முதலாவது பட்டதாரியும் கூட.

இஸ்லாமிய குடும்பவியல் சட்டம் ( Islamic Family Law ) எனும் நூலை எழுதியுள்ளதுடன் குறித்த துறையில் ஆழமான அறிவும் வாசிப்பும் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

The lord chief justice has apponted Hon. Rafiya Arshad as a deputy district judge on the Midland Circuit.

Rafiya is the first woman in a western country to be appointed as a judge in Hijab and amongst a handful of female Muslim judge world wide. 

This is an achievement not just for woman but hijab wearing Muslim women.

Rafiya is a member of St. Mary's family law chamber in Nottingham. 

She was called to the bar 2002 and has practiced in family law for over seventeen years.

She is an experienced and expert in islamic family law and written a book as named Islamic  Family Law.



No comments

note