JobVibe.lk - Sri Lanka Job Portal

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பௌத்த பிக்குகள் வந்தது ஏன்?

நேற்று முன்தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் கூட்டப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் எதிர்பாராத விதமாக பிக்குகள் சமூகத்தினர் சமுகம் தந்திருந்தனர். அவர்களுக்கு முன்வரிசையில் இடமும் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டிருந்தது. 


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும் பிக்குகளை முன்னிலைப்படுத்தி பௌத்த விகாரைகளின் ஊடாக தங்களது இரகசியப் பிரச்சாரத்தை எடுத்துச் சென்று தேர்தலில் வெற்றி பெறுவதற்கான முயற்சியை எடுத்து வருகிறார்களா என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்துகிறது என வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியக் கலாநிதி சிவமோகன் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்துக்கு மதகுருமாரை அழைத்து வரும் முயற்சிகள் இருந்திருந்தால் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதகுருமாரும் அழைக்கப்பட்டிருக்க வேண்டும். 


ஆனால் அப்படி அழைக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இதில் கலந்து கொண்ட பௌத்த பிக்குகளும் எந்தவித ஆதாரங்களும் இன்றி அரசாங்கம் கொரோனாவைக் கட்டுப்படுத்தி விட்டது என்றவிதத்தில் துதி பாடிச் சென்றதை அவதானிக்க முடிந்தது. ஒரு அவசரகால நடவடிக்கையின் போது தேவையில்லாதவர்களுக்கு கூட்டங்களில் கலந்து கொள்ள அனுமதி வழங்குவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. பிக்குகளை வைத்து தேர்தல் வியூகம் வகுக்கப்படுகிறதா, அதற்காகத்தான் பிக்குகள் முன்னிலைப்படுத்தப்பட்டார்களா என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் கேள்வி எழுப்பினார்.


நன்றி - மீழ்பார்வை -





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال