Breaking News

கோவிட் 19 தொடர்பாக புத்தளம் நகருக்கு வருகை தருவோருக்கு விழிப்புணர்வு

கோவிட் 19 தொடர்பான புத்தளம் நகருக்கு வருகை தரும் பொது மக்களுக்காக அறிவுறுத்தும் விழ்ப்புணர்வு சேவையொன்று புத்தளம் நகரில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


புத்தளம் மாவட்டத்திற்கான ஊரடங்கு சட்டம் தளர்ப்பட்டத்தைத் தொடர்ந்து புத்தளம் நகருக்கு தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வருகை தரும் பொது மக்களுக்கு கோவிட் 19 தொடர்பாக அறிவுறுத்துவதற்காக விசேட அறிவித்தல் சேவையொன்று புத்தளம் நகரில் மேற் கொள்ளப்பட்டு வருகின்றது. 


புத்தளம் நகரைச் சுற்றி ஒலிபெறுக்கிகள் பொறுத்தப்பட்டு அதனூடாக இந்த அறிவுறுத்தும் சேவை இடம் பெற்று வருகின்றது.
புத்தளம் மாவட்ட செயலகம் , இலங்கை பொலிஸார், புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், புத்தளம் மாவட்ட சிவில் சமூக அமைப்பு சம்மேளனம் ஆகியன இணைந்து இந்த விழிப்புணர்வு அறிவுறுத்தும்  சேவையை ஏற்பாடு செய்துள்ளது.

நன்றி - புத்தெழில் -






No comments