முஸ்லிம்கள் கவனமாக கடக்க வேண்டிய மூன்று கண்டங்கள்
ஏக காலத்தில் முஸ்லிம்கள் மூன்று கண்டங்களிலிருந்து தப்பிக்க வேண்டி இருக்கிறது.
01) கொரோனா
02) ஈஸ்டர் குண்டுவெடிப்பு ஓராண்டு நிறைவு
03) பொதுத்தேர்தலும் 2/3
02) ஈஸ்டர் குண்டுவெடிப்பு ஓராண்டு நிறைவு
03) பொதுத்தேர்தலும் 2/3
பெரும்பான்மையும்
கொரோனாவை இலங்கைக்குள் கொண்டுவந்தது முஸ்லிம்கள்தான் எனவும்; முஸ்லிம்கள் கொரோனாவை கட்டுபடுத்த அரசிற்கு ஒத்துழைப்பும் ஆதரவும் நல்கவில்லை எனவும்; இந்த அனர்த்த நேரத்திலும் தமது ஜனாசாக்களை எரிக்காமல் புதைக்க வேண்டுமென இஸ்லாமிய அடிப்படைவாதம் பேசுவதாகவும் ஒரு விம்பம் கொடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
அதேநேரம், கடந்த வருடம் ஏப்ரல் மாதம் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் நிகழ்வை மீளநினைவுறுத்தும் வண்ணம்; புதிய காட்சிப்படங்களும் வீடியோக்களும் தயார்படுத்தப்பட்டு; இலங்கையின் இறைமைக்கு முஸ்லிம்கள் ஆபத்தானவர்கள் எனவும்; சர்வதேச பயங்கரவாதிகளின் உட்கூறு எனவும் மீண்டும் பிரச்சாரம் முடுக்கிவிடப்படுவதோடு; கிறிஸ்தவ சமூகத்தின் உணர்வுகளை முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக திருப்பும் முயற்சியும் இடம்பெறவுதாக உணர முடிகிறது.
இந்த இரண்டு விடயங்களையும் முதலீடு செய்யும் களமாக எதிர்வரும் பொதுத்தேர்தல் பயன்படுத்தப்படவுள்ளது. "முஸ்லிம் வெறுப்புணர்வை" பிரச்சாரம் செய்வதன் மூலம் அதிக பாராளுமன்ற உறுப்பினர்களை பெறும் யுக்திக்கான அனைத்து ஏற்பாடுகளும் இடம்பெற்று முடிந்ததாகவே தெரிகிறது.
எதிர்வரும் ஏப்ரல் 28 ஆம் திகதி; பொதுத்தேர்தலுக்கான மறுதிகதி அறிவிக்கப்படவுள்ளதாகவும்; அதிலிருந்து 06 அல்லது 07 வாரங்களுக்குள் தேர்தல் திகதி அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது மே மாதம் (அடுத்த மாத) இறுதிப்பகுதியாக தேர்தல் தினம் அமையும்.
இவ்வாறு தேர்தல் வருகின்ற நேரத்தில்;
👉🏽 நோன்பு காலம் என்பதால் முஸ்லிம்கள் மத்தியில் பிரச்சாரங்களை மேற்கொள்வதிலுள்ள நடைமுறை சிக்கல்கள்
👉🏽 கொரோனா அச்சத்தால் மக்களை கூட்டமாக சந்திக்க முடியாத நிலை
👉🏽 முஸ்லிம்களின் வாக்களிப்பு வீத வீழ்ச்சி
என்பவற்றால் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவங்கள் குறைய வாய்ப்புள்ளது
மறுபக்கம், சிங்கள வாக்காளர்களை இனவாதத்தினூடாக கட்டி; நாட்டை காப்பாற்றவும் கட்டியெழுப்பவும் வாக்களித்தேயாக வேண்டும் என தூண்டி; சாத்தியமான எல்லா மார்க்கங்களிலும் வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு சேர்த்து வாக்களிச் செய்வார்கள்.
அதனூடாக தாம் நினைத்த வண்ணம் சிங்கள உறுப்பினர்களை அதிகரிப்பதோடு - 2/3 பெரும்பான்மை யை நோக்கி நகரும் நிலையை உருவாக்கிக்கொள்வர்.
பாராளுமன்றம் கையில் இல்லாமலே இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் விடயங்கள் இவ்வளவு கடுமையானவையாக இருப்பின் - 2/3 பெரும்பான்மையும் கிடைத்தால் நமது நிலை என்ன என்பதை சிந்தித்துப் பார்க்கவே முடியாமல் இருக்கிறது.
முஸ்லிம்கள் இந்த மூன்று கண்டங்களையும் மிகக்கவனமாகவும் நிதானமாகவும் கடக்க வேண்டும். அதற்கு அல்லாஹ்வின் உதவியை நாடி பிரார்த்தனை செய்யுங்கள்.
- ஏ.எல்.தவம் -
முன்னாள் மாகாண சபை
உறுப்பினர்.
No comments