நாட்டிற்கு பேராபத்து வரும்: எச்சரித்த ஜே.வி.பி!
🌐 MADURAN KULI MEDIA
12 04 2020🌐
நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் பொதுத் தேர்தலை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜே.வி.பியின் தலைவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க குற்றஞ் சுமத்துகின்றார்.
கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், தேர்தலை தற்போதைய நிலைமையில் நடத்துவதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் தெரிவித்தார்.
ஆட்சியிலுள்ள அரசாங்கம் விசேடமாக ஜனாதிபதிக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையே கடும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. தேர்தலை ஒத்திவைத்து மக்கள் பக்கமாக தேர்தல்கள் ஆணைக்குழு நிற்கின்றது. ஆனால் மக்களின் பாதுகாப்பை கொஞ்சம்கூட பார்க்காமல் தேர்தலை நடத்துவதாக அரசாங்கம் முயற்சித்து வருகிறது. இதனால் தேர்தலை இப்போதைக்கு நடத்தக்கூடாது. நடத்தினால் நாட்டிற்கே பேராபத்து வரும் என்று அவர் தெரிவித்தார்.
செய்தி ஆசிரியர்
S.M.M.SHAFAQ
(JAWADHI)
No comments