Breaking News

🇱🇰வீதி விபத்தில் பொலிஸ் சார்ஜன் உயிரிழப்பு🇱🇰.

🌐 MADURAN KULI MEDIA🌐

2020.04.14 

ஹொரவ்பொத்தான - அனுராதபுரம்
பிரதான வீதி
ஹொரவ்பொத்தான, அலபெத்தாவ
சந்தியில் நேற்று மாலை இடம்பெற்ற
விபத்தில் பொலிஸ் சார்ஜனொருவர்
உயிரிழந்துள்ளதாக பொலிஸார்
தெரிவித்தனர்

இவ்வாறு உயிரிழந்தவர்
ஹொரவ்பொத்தான பொலிஸ்
நிலையத்தில் கடமையாற்றும் அதே
இடத்தைச் சேர்ந்த சார்ஜன் விபுல
ரத்னாயக்க (40வயது) எனவும்
பொலிஸார் தெரிவித்தனர்

கடமையை முடித்துக் கொண்டு
மோட்டார் சைக்கிளில் வீடு சென்ற
போது லொறியொன்று
மோதியதினாலேயே இவ்விபத்து
இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார்
தெரிவித்தனர்

உயிரிழந்தவரின் சடலம் தற்போது
ஹொரவ்பொத்தான பிரதேச
வைத்தியசாலை பிரேத அறையில்
வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக
விசாரணைகளை ஹொரவ்பத்தான
பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.

செய்தி ஆசிரியர்.
 S.M.M.SHAFAQ.
  (JAWADHI)



No comments