கனமூலை பெரிய பள்ளி(பைத்தூல் மால் நிதியம்) முதல் கட்ட உலர் உணவு விநியோகம்.
தற்போது கொரோனோ COVID 19 தொற்று நோய் எமது தாய் நாட்டில் ஏற்படுத்தியுள்ள அசாதாரண சூழ்நிலை, ஊரடங்கு உத்தரவு காரணமாக கூலி,சிறு தொழில்களில் ஈடுபடுபவர்களின் அன்றாட வாழ்வு வெகுவாகப் பாதிக்கப்பட்டள்ளது.
இந்நிலையைக் கருத்திற் கொண்டு, கனமூலை பெரிய பள்ளியின் நிர்வாக கட்டமைப்புக்குட்பட்ட மிஃராஜ் புரம் ஜுமுஆ மஸ்ஜித் மற்றும் 08 தைக்கா எல்லைக்குள் வசிக்கும் தேவையுடையவர்களுக்கும் குறிஞ்சாவட்டையில் வசிக்கும் 09 சகோதர சமூதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கும் நேற்று புதன்கிழமை (25/3/2020) முதல் கட்ட உலர் உணவு பொதிகள் விநியோகம் இறைவனின் அருளால் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்,,,
இதற்கான நிதி; பெரிய பள்ளியின் கீழ் இயங்கும் பைத்துல் மால் நிதியத்தினூடக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லா புகழும் அல்லாஹ்வுக்குரியதே
நன்றியுடன்
கனமூலை பெரிய பள்ளி நிர்வாகம், பொதுச்சபை மற்றும் பைத்துல்மால் நிதியம்
2020.03.26
No comments