Breaking News

கொழும்பு, கம்பஹா, புத்தளம் மாவட்டங்களுக்கு ஊரடங்கு நீடிப்பு ! ஏனைய மாவட்டங்களுக்கு திங்கள் தளர்வு!

கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 6.00 மணி நீடிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு, கம்பஹா, புத்தளம் ஆகிய மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் அமுலிலுள்ள ஊரடங்கு எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் அன்றையதினம் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படுமென அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பொலிஸ் ஊரடங்கை தொடர்ந்தும் அமுல்படுத்துவதா இல்லையா என்பது தொடர்பான அறிவிப்பு 24 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு அறிவிக்கப்படும்.



No comments