வெளிநாடு சென்று நாடு திரும்பிய புத்தளம் நபருக்கு கொரோனா தொற்று..!
புத்தளம் சாலிஹீன் பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த துவான் முஹம்மது துவான் என்பவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வெளிநாடு ஜமாஅத்சென்று நாடுதிரும்பிய குறித்த நபர் தன்னைத்தானே தனிமைப்படுத்தாது நகரில் சுற்றித் திரிந்துள்ளார்.
இதனையடுத்து திடீர் சுகயீனமுற்ற நிலையயில் குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு கொரோனா பரிசோதனைக்காக அனுப்பப்பட்டிருந்தார்..தற்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக புத்தளம் நகரபிதா கே.ஏ.பாயிஸ் தெரிவித்துள்ளார்..
தொற்று ஏற்பட்டவரின் குடும்பத்தை அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர்..
சாலிஹீன் பள்ளிவாசலை சூழ இருப்போரும் சுகாதார அதிகாரிகளின் கண்காணிப்புக்கு உள்ளாகலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர், யார் , யாரையெல்லாம் சந்தித்தார் என்பது குறித்து தற்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
No comments