Breaking News

SLMC போராளிகள் குழும பயணத்தில் எட்டப்பர்களால் எதிர்கொள்கின்ற சதிமானங்கள். பயணம் தொடருமா ?


முஸ்லிம் காங்கிரஸ் என்னும் பேரியக்கத்தை அழித்து அதன் தலைவர் ரவுப் ஹகீமை ஓரம் கட்டுவதற்காக சமூக வலைத்தளங்கள் மூலமாக மேற்கொண்ட போலி பிரச்சாரங்களுக்கு எதிராக போராடி அம்முயற்சியை முறியடித்ததில் அதிகமான உரிமை SLMC போராளிகள் குழுமத்துக்கு உள்ளது.
                                                                                                                        தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள் தனது அரசியல் பயணத்தில் எவ்வாறு துரோகங்களையும், சதிகளையும் எதிர்கொண்டாரோ, அதேபோல் எமது போராளிகள் குழுமமும் இந்த போராட்டத்தில் பாரிய துரோகங்களை எதிர்கொண்டு வருகின்றது. 
                                                                                                                        சமூகவலைத் தளங்களில் மாற்று கட்சி காரர்களிடமிருந்து ஏராளமான வசைபாடல்களையும், அவதூறுகளையும், அச்சுறுத்தல்களையும் நேரடியாக சந்தித்தோம். 
                                                                                                                        ஆனால் முஸ்லிம் காங்கிரசின் சில பிரமுகர்களிடமிருந்தும், தலைவருக்கு அருகாமையில் இருக்கின்ற சில எடுபிடிகளிடமிருந்தும் எதிர்கொண்ட சதிமானங்களும், குழிபறிப்புக்களும் ஏராளம்.
                                                                                                                      தங்களது கட்சிக்காக அர்ப்பணிப்போடு உழைக்கின்றார்கள் என்று சிந்திக்காமல், கட்சி அழிந்தாலும் பருவாயில்லை. இந்த குழுவினர் மீது தலைவருக்கு இருக்கின்ற நம்பிக்கை காரணமாக அரசியலில் தங்களது இடத்தை பிடித்துவிடுவார்களோ என்ற அச்சம் கட்சியின் சில உள்ளூர் பிரமுகர்களிடம் உள்ளது.
                                                                                                                                            அதுபோல் தலைவருக்கு அருகாமையில் வந்துவிடுவார்களோ ? தங்களது இடம் பறிபோய்விடுமோ ? என்ற பயம் தலைவருக்கு அருகில் உள்ள சில எடுபிடிகளிடம் காணப்படுகின்றது. 
                                                                                                                      குழுமம் எதிர்கொள்கின்ற தடைகளையும், துரோக செயல்களையும் தேசிய தலைவரிடம் எத்திவைக்கப்பட்டிருந்தும் அதற்கு எதிராக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாதது போராளிகளின் மனதில் ஓர் வடுவாக வேரூன்றி உள்ளது. 
                                                                                                                        எங்களது வரலாற்றில் குழுமத்தின் செயல்பாட்டுக்காக எந்த சந்தர்ப்பத்திலும் தேசிய தலைவரிடம் அல்லது கட்சியின் வேறு எந்த பிரமுகர்களிடமிருந்து பணமோ, பொருளோ அல்லது அன்பளிப்புக்களோ பெற்றுக்கொண்ட வரலாறுகள் இல்லை.
                                                                                                                        எந்த சந்தர்பத்திலும் நாங்கள் கேட்டதுமில்லை. அவர்கள் தந்ததுமில்லை. இது அல்லாஹ்வின் மீது ஆணையாகும்.
                                                                                                                        ஆனாலும் மாற்று கட்சியின் கூலி எழுத்தாளர்களினால் மஞ்சல் கவர் என்றும், கூலிப்படையினர்கள் என்றும் நாங்கள் பட்டம் சூட்டப்பட்டோம். சத்தமின்றி சலுகைகளை அனுபவிக்கின்றவர்களுக்கு அவ்வாறான வசைபாடல்கள் சென்றடைவதில்லை.
                                                                                                                                                  குழுமத்தின் செயல்பாட்டுக்கான செலவுகள் அனைத்தும் குழும உறுப்பினர்களின் சொந்த அறவீடுகள் மூலமாகவே பணம் செலவழித்து வருகின்றோம்.
                                                                                                                      இதனை புரிந்துகொள்ளாத சிலர் தாங்கள் தலைவரிடமிருந்து பணம் பெறுவதாக கற்பனை செய்துகொண்டு வசைபாடி திரிகின்றார்கள். 
ஆனாலும் கடந்த காலங்களில் குழுமத்தின் உறுப்பினர்களில் சிலர் குழுமத்துக்கு தெரியாமல் தங்களது சுயநலத்துக்காக குழுமத்தின் பெயரை பாவித்து எட்டப்பர் வேலை செய்து பணமும், பொருள்களும் பெற்று குழுமத்தின் நற்பெயருக்கு கலங்கத்தினை ஏற்படுத்தினார்கள்.
                                                                                                                                          அவ்வாறான எட்டப்பர்களை எந்த தராதரமும் பாராமல் குழுமத்தில் இருந்து வெளியேற்றி குழுமத்தை சுத்தப்படுத்தினோம். 
                                                                                                                      எனவே நாங்கள் கொண்ட கொள்கையில் உறுதியாக பயணிக்கும்போது மாற்றுக்கட்சி காரர்களிடம் விலை பேசப்பட்டோம். இருந்தாலும் அற்ப ஆசைகளுக்கு சோரம்போகாமல் பயணிக்கின்ற எங்களது கட்சிக்கான இலவச சேவைகளை குறைத்து மதிப்பிடுவது எதிர்காலத்தில் ஆபத்தினை தோற்றுவிக்கும்.
                                                                                                                      எங்கள் பயணம் தொடரும்.
                                                                                                                                                      SLMC போராளிகள் குழுமம்

No comments