Breaking News

கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் நீண்ட கால நீர்பிரச்சினைக்கு சஜாதினால் தீர்வு...!!!

நீண்ட காலமாக கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில் குறைபாடாக இருந்த நீர்ப் பிரச்சினையை நிவர்த்தி செய்யும் முகமாக, இன்று 05/08/2019 ஆம் திகதி ஜனாப் லத்தீப் மற்றும் அவரது புதல்வரான  ஸஜாத் ஆகியோர் குறித்த பாடசாலைக்கு சமூகமளித்து அக்குறைபாட்டை பார்வையிட்டதோடு அப்பாடசாலை மாணவர்கள் இதனால் மேற்கொள்ளும் அசௌகரியங்களையும் கேட்டறிந்து கொண்டனர்.

இதன் போது மேற் குறிப்பிட்ட பிரச்சினையை ஒரு வார காலத்தினுள்  தீர்ப்பதாகவும், அதற்கான முழு செலவீனத்தையும் தாம் பொறுப்பெடுப்பதாகவும் ஜனாப் லத்தீப் மற்றும் அவரது புதல்வர் ஸஜாத் ஆகியோர் வாக்குறுதியளித்துள்ளனர்.

ஸஜாத் கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏக இறைவன் இப் புனித துல்ஹஜ் மாதத்தில் அவர்களது நன்கொடையை ஏற்று பூரணமான நற் கூலியை வழங்க நாமும் பிரார்த்திப்போம்.
 


No comments