Breaking News

கடையாமோட்டை மத்திய கல்லூரியின் சாதனை

2018 க.பொ.த. உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் கடையாமோட்டை மத்திய கல்லூரியிலிருந்து 28 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பினை பெற்றுள்ளதாக கல்லூரி அதிபர்எம்.எச்.எம். தெளபீக்  புத்தெழிலுக்குத் தெரிவித்தார்.  இது பாடசாலை வரலாற்றில் ஒரு  சாதனையாகும்

வணிகப் பிரிவிலிருந்து  16 மாணவர்களும் விஞ்ஞானப் பிரிவிலிருந்து 06 மாணவர்களும்  கலைப் பிரிவிலிருந்து 06 மாணவர்களும் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.       

விஞ்ஞானப் பிரிவில் முதன் முறையாக  வைத்திய துறைக்கு ஒரு மாணவி தெரிவாகியுள்ளார். வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எச்.எம். ரியாஸின் புதல்வி   எம்.ஆர்.பாத்திமா ரிபாதாவே இந்த வாய்ப்பினை பெற்றுள்ளார்.


1 comment: