Breaking News

அனுராதபுரம் , யாழ்ப்பாணத்திற்கு புதிய பாதை

புத்தளம் நிருபர்

நெடுஞ்சாலைகள் , வீதி அபிவிருத்தி , பெற்றோலிய வளங்கள்  அபிவிருத்தி  அமைச்சின் கீழ் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால்  மேற் கொள்ளப்படும்   இதயத்தினை இணைக்கும் தங்க வீதி வேலைத்திட்டத்தின்   கீழ்  புத்தளம் பாலாவி முதல் கல்லடி நாற் சந்தியியூடாக  மீஒயா , முறியக்குளம் , புத்தளம் அனுராதபுர வீதியின்    ஏழாம் மைல் வரை வீதியை காபட் வீதியாக அமைக்கும் வேலைத்திட்டத்தினை  புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார ஆரம்பித்து வைத்தார்.

இந்த    பாதை அபிவிருத்திக்காக 790 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது  இந்த. புதிய பாதை அமைக்கப்பட்டதன் பின்னர் கல்பிட்டி , சிலாபம் , நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களிலிருந்து  அனுராதபுரம் , யாழ்ப்பாணம் , முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களுக்கு பயணிபோர் புத்தளம் நகருக்கு வருகை தராது பாலாவி , கல்லடி மீஒயா ஊடாக பயணிக்க முடியும். 


 மீஒயா ஆற்றுக்கு மேலாக பாலமொன்றும் அமைக்கப்படவுள்ளது. இந்த வீதியின் அபிவிருத்தி பணிகள்  மிக விரைவாக நிறைவு செய்யப்படும் என்றும் இந்த பாதை அபிவிருத்தி செய்வதினூடாக  புத்தளம் நகரில் வாகன நெரிசல் குறையுமென்றும்  பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.





No comments