முஸ்லிம் காங்கிரஸ் முயற்சியினால் விளக்கமறியலில் உள்ள புத்தளம் நிறைமாத கர்ப்பிணி இன்று விடுதலையாகிறார்
புத்தளம் மண்டலகுடா பிரதேசத்தை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி முகத்தை பாதியாக மூடி ஆடை அணிந்த குற்ற்றச்சாட்டில் ICCPR சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் உள்ள ரினோஸா இன்று (06) வியாழக்கிழமை விடுதலையாகவுள்ளார் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர், சட்டத்தரணி ரிஸ்வி ஜவஹர்ஷா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் வழிகாட்டலில் கட்சியின் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் இயங்கிவரும் கட்சியின் சட்டத்தரணிகள் குழு கடந்த மே மாதம் 28ஆம் ஆம் திகதி ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தலைமையில் கட்சியின் சட்டத்தரணிகள் குழு, தகுந்த காரணம் எதுவுமின்றி கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு பிணை இன்றி விளக்க மறியலில் உள்ள சகோதரர்களின் விடுதலை தொடர்பாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி ரோஹந்த அவர்களை சந்தித்து சுமார் 60 நபர்களின் கோப்புக்களை வழங்கி அவர்களது விடுதலை தொடர்பாக கலந்துரையாடினார்கள்.
இதன்போது, கல்பிட்டி மண்டலக் குடாவினைச் சேர்ந்த 8 மாத கர்ப்பிணி சகோதரி ரினோஸா முகம் மூடிய குற்றச் சாட்டில் கைது செய்து ICCPR சடடத்தின் கீழ் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டு பிணை இன்றி விளக்க மாறியலிலே வைக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பிலும் கட்சியின் சட்டத்தரணிகள் குழுவினரால் சட்டமா அதிபரின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து, அவரை பிணையில் விடுவிப்பதற்கு தேவையான அறிவுறுத்தல்களை கல்பிட்டி பொலிஸாருக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இன்று (06) இந்த வழக்கு விசாரணைக்க எடுத்துக்கொள்ளப்படுவதாகவும், இவ் வழக்கிற்கு சட்டத்தரணி நதீஹா அவர்கள் ஆஜராகவுள்ளார் என்றும் சட்டத்தரணி ரஸ்வி ஜவஹர்ஷா தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸ் சட்டத்தரணிகள் குழுவின் தலையீட்டினால் தலங்கம பிரதேசத்தில் ஒருவரும், வாரியபொல பிரதேசத்தில் எட்டுப் பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
நன்றி - SLMC வெளிச்சம் -

No comments