புத்தளம், அக்கரைப்பற்றுப் பிரதேச மக்களின் நீண்டகால கோரிக்கைகளுள் ஒன்றாக இருந்த " மணியக்காரன் வவுன்" அபிவிருத்தி தொடர்பாக மத்திய அரசின் கவனத்திற்கு புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ எம். ஜே. எம். பைசல் அவர்கள் கொண்டு வந்ததை அடுத்து இந்தப் பாதை தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட்டு மத்திய அரசாங்கத்தின் பொறுப்புக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது. இதற்கான விஷேட வர்த்தமானி அறிவித்தல் 2026.04.22 ஆம் திகதி வெளியிடப்பட்டது.
இவ்வீதி பத்துலுஓய - உடப்பு - ஆண்டிமுனை - கட்டைக்காடு - கொத்தான்தீவு - கனமூலை - கடையாமோட்டை - புழுதிவயல் - கரம்பை உள்ளடங்கலான "மணியக்காரன் வவுன்" மொத்த நீளம் 33.260 கி.மீீ. ஆகும்.

