JobVibe.lk - Sri Lanka Job Portal

பாராளுமன்ற உறுப்பினர் பைசல் தலைமையில் புத்தளம் தம்மன்னாகமவில் சமூக சக்தி நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பம்.

எம்.யூ.எம்.சனூன்

"வளமான நாடு, பாதுகாப்பான வாழ்வு" என்ற நோக்கத்துடன் தேசிய மக்கள் சக்தியின், தேசிய இயக்கமான பிரஜா சக்தி திட்டத்தின் கீழ், "ஆயிரம் கிராமங்கள், ஆயிரம் வேலைத்திட்டங்கள்" என்ற தேசிய வேலைத்திட்டம் புத்தளம் பிரதேச செயலக பிரிவின் தம்மன்னாகம கிராம அலுவலர் பிரிவில் செவ்வாய்க்கிழமை (02) ஆரம்பித்து வைக்கப்பட்டது.


புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசல் தலைமையில் இந்த செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 


இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் நகர அமைப்பாளர், பிரதேச சபை உறுப்பினர் இஷாரா சசிகா, புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ரஜிதா, பிரஜா சக்தி அபிவிருத்தி சபைக் குழுத் தலைவர்கள், புத்தளம் பிரதேச செயலாளர் மற்றும் அரசாங்க அதிகாரிகள் குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.













Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال