JobVibe.lk - Sri Lanka Job Portal

டித்வா பாதிப்பின் வாழ்வாதாரததை துரிதப்படுத்தல் தொடர்பான புத்தளம் மாவட்ட செயலாளர் கற்பிட்டி பிரதேச செயலக விஜயம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

டித்வா சூறாவளி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கற்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மக்களின் வீடுகள் மற்றும் வாழ்வாதாரங்களை விரைவாக வழமைக்குக் கொண்டு வருவது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று செவ்வாய்க்கிழமை (19) கற்பிட்டி பிரதேச செயலாளர் பீ.ஜீ.எஸ்.என் பிரியதர்ஷினி தலைமையில் புத்தளம் மாவட்ட செயலாளர் வை இந்திக மஞ்சுள சில்வாவின் பங்குபற்றுதலுடன் கற்பிட்டி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.


பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு மற்றும் நிவாரணங்களை வழங்கும் செயல்முறையை மேலும் திறமையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் மேற்கொள்வதே இக்கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாகும்.


இதன்போது, கற்பிட்டி பிரதேச செயலக பிரிவுக்குள் தற்போது எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வுகண்டு, நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துவதற்குத் தேவையான நடைமுறை வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும்  இதன்போது மாவட்ட செயலாளர் அதிகாரிகளுக்கு வழங்கினார்.


இந்நிகழ்வில் உதவித் திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர்கள், நிர்வாக கிராம உத்தியோகத்தர் உட்பட  கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








Previous Post Next Post

نموذج الاتصال