JobVibe.lk - Sri Lanka Job Portal

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோரை புத்தளம் மாநகர சபை உறுப்பினர் ரனீஸ் பதூர்தீன் தலைமையிலான குழுவினர் சந்திப்பு...!.

எம். யூ. எம். சனூன் - புத்தளம்

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் புத்தளம் தொகுதி அமைப்பாளரும், புத்தளம் மாநகர சபை உறுப்பினருமான ரனீஸ் பதூர்தீன் தலைமையிலான குழுவினர் பாராளுமன்றத்தில் சந்தித்து, புத்தளம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடினர்.


இதன்போது புத்தளம் அனல் மின் நிலையத்தால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விசேடமாக பேசப்பட்டது. 


அனல் மின் நிலையம் அமைக்கப்படுவதற்கு முன் இருந்த சூழ்நிலை மற்றும் அதன் பின்னர் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சுகாதார பாதிப்புகள் தொடர்பாக ஆய்வு செய்ய ஒரு ஆணைக்குழு அமைக்க வேண்டும் என கோரிக்கையும் விடுக்கப்பட்டது. 


இதற்கான தீர்மானம் புத்தளம் மாநகர சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் இதன்போது எடுத்துரைக்கப்பட்டது. 


கரைத்தீவு சின்னநாகவில்லு பகுதியில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள், பிரதேச கிராம சேவகர் எல்லை பிரச்சினைகள்,

கல்பிட்டி பிரதேச சபை தொடர்பான விடயங்கள், கல்பிட்டி வைத்தியசாலை தொடர்பான தேவைகள், 

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உதவி தலைவரின் நிதி ஒதுக்கீட்டில் கட்டி முடிக்கப்பட்ட ஐந்து மாடிக் கட்டடத்திற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் வசதிகள் பெற்றுக்கொள்ளல் தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. 


அதே போல், கட்சியின் எதிர்கால வேலைத்திட்டங்கள் மற்றும் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.


இந்தக் கூட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்..


















Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال