இரசாயனமற்ற உணவு உற்பத்தியும் சுயதொழில் மேம்பாட்டு பயிற்சியும்
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
புத்தளம் பாலாவி முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தின் ஏற்பாட்டில் இரசாயனப் பொருட்கள் அற்ற மற்றும் நீண்ட காலம் பாதுகாத்து விற்பனை செய்யக்கூடிய உணவு உற்பத்தி முறைகள் தொடர்பான பயிற்சி இரு நாட்கள் பாலாவி முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தின் தலைமைக் காரியாலயத்தில் அதன் நிறைவேற்று பணிப்பாளர் எம் ஜூவைரியா முகைதீன் தலைமையில் இடம்பெற்றது
சுயதொழில் முயற்சியில் ஈடுபட விரும்பும் மற்றும் சுயதொழில் செய்து கொண்டிருக்கும் பெண்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேற்படி இரு நாள் பயிற்சியின் வளவாளராக நகா பசுமை தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி கோகிலாதேவி ரன்ஞித்குமார் கலந்த சிறப்பித்தார்
இந்த பயிற்சியின் மூலம் பெண்களுக்கு ஆரோக்கியமான மற்றும் தரமான உணவுப் பொருட்களை தயாரிக்கும் முறைகள், அவற்றை சுத்தமாக பாதுகாக்கும் நுட்பங்கள், சந்தைப்படுத்தல் முறைகள் மற்றும் வீட்டிலிருந்தே வருமானம் ஈட்டக்கூடிய சுயதொழில் வாய்ப்புகள் குறித்து தெளிவூட்டப்பட்டது. குறிப்பாக இரசாயனப் பொருட்கள் அற்ற உணவுப் பொருட்களின் அவசியம் மற்றும் மக்களின் அதிகரித்து வரும் ஆரோக்கிய விழிப்புணர்வை அடிப்படையாகக் கொண்டு, சந்தையில் நல்ல வரவேற்பைப் பெறக்கூடிய உற்பத்திகளை உருவாக்குவது பற்றியும் நடைமுறை ரீதியாக கற்றுக்கொடுக்கப்பட்டதுடன் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தையும் தன்னம்பிக்கையையும் உயர்த்தும் நோக்கில் இப்பயிற்சி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.








No comments