Breaking News

அமெரிக்க ஆக்கிரமிப்பும், இஸ்ரேலிய அதிகாரிகளின் அதிருப்தியும்.

இஸ்ரேலின் Ben Gurion விமான நிலையத்தை அமெரிக்க இராணுவம் பயன்படுத்துவதனால், கடந்த இரண்டு மாதங்களில் அந்நாட்டின் விமான நிலைய ஆணையத்திற்கு பல நூறு மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதென்று இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலைமை தொடர்ந்தால், இன்னும் இழப்புத் தொகை பில்லியன்களாக உயரக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். 


விமான நிலையத்தின் மூன்றில் ஒரு பங்கினை மாத்திரம் பயன்படுத்துவதாகவும், அதன் பெரும்பகுதி அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்காக உள்ளதுடன், அனைத்து வளங்களும் அமெரிக்க படைகளினால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளது. 


டெல் அவிவ் அருகே உள்ள இஸ்ரேலின் முக்கிய சர்வதேச நுழைவாயிலான Ben Gurion விமான நிலையத்தில், தற்போது டஜன் கணக்கான அமெரிக்க எரிபொருள் நிரப்பும் மற்றும் காகோ விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.


இந்த மாத தொடக்கத்தில், Ben Gurion னில் உள்ள அமெரிக்க இராணுவ விமானங்கள், பொதுமக்கள் விமானப் போக்குவரத்தை முடக்குவதாகவும், வெளிநாட்டு விமான நிறுவனங்கள் மீண்டும் சேவையில் ஈடுபடுவதனை தாமதப்படுத்துவதாகவும் கூறப்படுகின்றது. 


முகம்மத் இக்பால் 

இலங்கை




No comments