முகத்துவாரத்தில் இடம்பெற்ற இலவச மருத்துவ முகாம்
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி செடோ சிறீலங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் கொழும்பு சமய சமூக நடுநிலை (CSR) மையத்தின் நிதி பங்களிப்புடன் கபோட் மற்றும் பிரஜைகள் பேரவையின் அனுசரணையுடன் ஒன்றிணைந்து எழுவோம் எனும் வேலைத்திட்டத்தின் ஊடாக கற்பிட்டி முகத்துவாரம் சிங்கள பாடசாலையில் இலவச மருத்துவ முகாம் ஒன்று சனிக்கிழமை (23) இடம்பெற்றது
கற்பிட்டி செடோ சிறீலங்கா நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளரும் பிரஜைகள் பேரவையின் கற்பிட்டி அழைப்பாளருமான ஏ.ஆர். முனாஸ் தலைமையில் இடம்பெற்ற இவ் இலவச மருத்துவ முகாமில் கற்பிட்டி பிரதேச சபையின் உப தவிசாளர் சமன் குமார ஹேரத் உறுப்பினர்களான ஏ.ஆர்.எம் முஸம்மில், கே.கலைச்செல்வி மற்றும் இப்ஹாம், கிராம உத்தியோகத்தர் எம்.பீ.எம் அர்ஷத், சமய சமூக நடுநிலையத்தின் தேசிய அமைப்பாளர் பீ.மிலான் பெரேரா, தேசிய இணைப்பாளர் சமிர பேரேரா, செஞ்சிலுவைச் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் நாதன் சாந்தகுமார், சமய சமூக நடுநிலையத்தின் ஊடக இணைப்பாளர் திலின ஆகியோரும் வைத்தியர்களான எம்.எம்.ஏ அமானா,ஆர்.எப் ஹஸ்னாஸ் மற்றும் மதுஷங்க ஆகியோர்களுடன் மருந்தாளர்கள் மற்றும் தாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் தொண்டர்களாக கலந்து கொண்டனர்
கற்பிட்டி முகத்துவாரம் மனித வாழ்வின் அத்தியாவசிய தேவைகளில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள மீன்பிடியை வாழ்வாதாரமாக கொண்ட ஒரு மீன்பிடி கிராமமாகும் இக்கிராமத்தில் மூவீனங்களைச் சேர்ந்த சுமார் 200 குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில் இவ்வாறான இலவச மருத்துவ முகாம்கள் காலத்தின் தேவையாக இருந்ததாகவும் இதற்கு முயற்சி செய்த சகல தரப்பினருக்கும் முகத்துவார கிராம மக்கள் தமது நன்றிகளையும் தெரிவித்தனர்.
மேற்படி இலவச மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளர்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.








No comments