JobVibe.lk - Sri Lanka Job Portal

கல்வி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட முதலாம் வகுப்பு புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான அறிமுக நிகழ்வு.

எம்.யூ.எம்.சனூன்

கல்வி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட முதலாம் வகுப்பு புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான இரண்டாம் மற்றும் மூன்றாம் தவனை பாடத்திட்ட அறிமுக நிகழ்வு அண்மையில் (15) புத்தளம பாலாவி சிங்கள மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.


புத்தளம வடக்கு கல்வி கோட்டத்துக்குட்பட்ட 42 ஆசிரியர்கள் இதில் கலந்து கொண்டனர்.


சத்திரப்பாடத்துக்கான இந்த அறிமுக நிகழ்வினை சித்திரப்பாடத்துக்கான ஆசிரியர் ஆலோசகரும், முன்னாள் தேசிய கல்வி நிறுவகத்தின் சித்திரப் பாட விரிவுரையாளரும்,  நாடறிந்த ஓவியருமான கலாநிதி  எம்.எம்.முஹம்மது வளவாளராக கலந்து கொண்டு நடாத்தி வைத்தார். 


ஆரம்ப பாட பிரிவுக்கான பிரதி கல்வி பணிப்பாளர் ஏ. அஸ்காவின் மேற்பார்வையில், புத்தளம் வடக்கு கோட்ட பிரிவின் வள வழங்குநர் திருமதி. பி.எம். பெர்னாண்டோவின் ஒருங்கிணைப்பில் இந்நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.















Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال