JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் நூர் ஜும்ஆ பள்ளி மஹல்லா மாணவனின் முன்மாதிரி மிக்க செயற்பாடு.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையில் ஏழாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவனும், புத்தளம் நூர் ஜும்ஆ பள்ளி மஹல்லாவில் வசித்து வருபவருமான பஸீல் முகம்மது பாயிக், எதிர்வரும் ஹஜ்ஜுப்பெருநாளையொட்டி உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்றும் பொருட்டு தான் சேகரித்த பணத்தொகையை நூர் பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளார்.


நூர் ஜும்ஆ பள்ளியின் பரிபாலன சபை தலைவர் ஏ.முஹம்மது பாயிஸிடம் குறித்த மாணவர் தான் சேகரித்த நிதி தொகையினை தனது உழ்ஹிய்யா பங்களிப்புக்காக வழங்கியுள்ளார்.


மாணவரின் இந்த முன்மாதிரி மிக்க செயலை நூர் ஜும்ஆ மஸ்ஜித் பரிபாலன சபை தலைவர் முஹம்மது பாயிஸ், செயலாளர் சட்டத்தரணி நுஹ்மான் உள்ளிட்ட பரிபாலன சபை உறுப்பினர்கள், மஹல்லாவாசிகள் அனைவரும் பாராட்டியுள்ளனர்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال