JobVibe.lk - Sri Lanka Job Portal

ஆளுமையின் அடையாளமாக மாணவர் தலைவர்களுக்கான சின்னம் அணிவிக்கும் நிகழ்வு.

எம்.யூ.எம்.சனூன்

வடமேல் மாகாணம், புத்தளம் மாவட்டத்தின் சிலாபம் கல்வி வலயத்திற்குட்பட்ட மாதம்பை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின், இடைநிலை மற்றும் உயர்தர மாணவர் தலைவர்களுக்கான சின்னம் அணிவிக்கும் நிகழ்வானது செவ்வாய்க்கிழமை (26)  பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இனிதே நடைபெற்றன.


பாடசாலை அதிபர் எஸ்.எல்.அன்வர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக மாதம்பை பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி சமன் ஏக்கநாயக்க, பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவின் உப பொலிஸ் பொறுப்பதிகாரியாக செயற்படும் மரீனா ஹசீம் ஆகியோருடன் பாடசாலை அபிவிருத்திக்காக பங்காற்றும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், மெஸ்டா குழு உறுப்பினர்கள் உள்ளடங்களாக பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஏனைய நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.


இந்நிகழ்வின் இறுதியில் பாடசாலையின் ஒழுக்கம், ஆளுமையின் முன்னேற்றம் ஆகியவற்றில் மாணவர் தலைவர்களின் பங்கு முக்கியமானது என்பதை வலியுறுத்தும் வகையிலான சத்தியப்பிரமாண நிகழ்வும், உரையும் நிகழ்த்தப்பட்டன.


தெரிவு செய்யப்பட்ட மாணவர் தலைவர்களுக்கு இதன்போது மாணவர் தலைவர்களுக்கான  சின்னங்களும் அதிதிகளினால் அணிவிக்கப்பட்டன.











Previous Post Next Post

نموذج الاتصال