என்னிடமிருந்து மஹபொலவிற்கு, மஹபொலவிலிருந்து பிள்ளைகளுக்கு எனும் இணையதளம் பிரதமரால் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
என்னிடமிருந்து மஹபொலவிற்கு, மஹபொலவிலிருந்து பிள்ளைகளுக்கு மஹபொல பழைய மாணவர்கள் இணையத் தளத்தினை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துவைக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (மே 12ஆம் திகதி) இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக பிரதமரும் கல்வி உயர்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்து கொண்டார்.
மஹபொல புலமைப்பரிசில் மூலம் பயன்பெற்ற பழைய மாணவர்களையும் , தற்போது பயன்பெற்று வரும் மாணவர்களையும் ஒரே வலையமைப்பிற்குள் கொண்டுவரும் நோக்கில் உருவாக்கப்பட்ட "என்னிடமிருந்து மஹபொலவிற்கு, மஹபொலவிலிருந்து பிள்ளைகளுக்கு" - மஹபொல பழைய மாணவர்கள் இணையத் தளத்தினை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்த பிரதமர் அங்கு தனதுரையில்:
மஹபொல பழைய மாணவர் வலையமைப்பின் ஊடாக, மஹபொல நிதியமானது வெறும் நிதி உதவியுடன் மாத்திரம் நின்றுவிடாது, அதற்கு அப்பால் சென்று, அதன் மூலம் உதவிபெறும் மாணவர்களின் ஏனைய தேவைகளுக்கும் ஒரு பக்கபலமாக அமையும் வகையில் அதனைக் கட்டியெழுப்புவதே எமது நோக்கமாகும். உங்களுக்குக் கிடைத்த இந்தப் புலமைப்பரிசிலை உங்களுக்கு மாத்திரம் கிடைத்த ஒன்றாகக் கருத வேண்டாம். இதன் ஊடாக உங்களது உயர்கல்விக்கான பிரவேசத்தை உறுதிப்படுத்துவதன் மூலம், உங்களிடமிருந்து நாட்டிற்கு ஒரு சேவை கிடைப்பதையே நாம் எதிர்பார்க்கின்றோம் எனவும் தெரிவித்தார்.







No comments