கற்பிட்டி சிந்தாத்திரை மாதா தேவாலயத்தின் 420 வது வருட பூர்த்தி திருவிழா
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி சிந்தாத்திரை மாதா தேவாலயத்தின் 420 வது வருட பூர்த்தியும் வருடாந்த திருவிழாவும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (2026/05/31) ஆலயத்தின் பிரதம குருவான பங்குதந்தை அருட்பணி அண்டன் நிரோஷன் குருசிங்க அடிகளாரின் தலைமையில் கொண்டாடப்பட உள்ளது
கற்பிட்டியில் கிறிஸ்தவர்களின் வருகையும் சிந்தாத்திரை மாதா தேவாலயம் ஐரோப்பாவின் அரசியல் விடுதலைக்காக 19 நாட்டு பக்தர்கள் தரிசித்த வரலாற்றுச் சிறப்புக்களையும் கொண்ட சிந்தாத்திரை மாதாவைக் கொண்ட கற்பிட்டி சிந்தாத்திரை மாதா தேவாலயத்தின் 420 வது ஆண்டு நிறைவு விழாவின் பிண்ணனியில் கிறிஸ்தவர்களின் பண்டைய வரலாற்று சுருக்கம் காணப்படுகின்றமைம் பெரும் துன்பம், அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் அளவற்ற துணிவு ஆகியவற்றால் கட்டப்பட்ட மகிமைமிக்க அடித்தளத்தின் 420வது ஆண்டு விழாவை கொண்டாடும் இந்நாளில், இரத்தம், வியர்வை மற்றும் கண்ணீருடன் கிறிஸ்தவத்திற்காகத் தங்களை அர்ப்பணித்த தமது முன்னோர்களையும், தமது நம்பிக்கை சிதைவின்றி நிலைத்திருக்க அயராது உழைத்த தலைசிறந்த குருமார்களையும் மிகுந்த மரியாதையுடன் நினைவுகூர்கின்றமை விஷேட அம்சமாகும்.

No comments