கற்பிட்டி பிரதேச கிராம சேவையாளர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சகல அனர்த்த கடமைகளிலிருந்தும் தற்காலிக விலகல்
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
கற்பிட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சகல கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என சகலரும் வெள்ளிக்கிழமை (19) முதல் தற்காலிகமாக அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான சகல கடமைகளிலும் இருந்து விலகிக் கொள்வதாக இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் கற்பிட்டி கிளையும் , அகில இலங்கை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் கற்பிட்டி கிளையும் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது
கற்பிட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மண்டலக்குடா, கண்டக்குழி, ஆலங்குடா மற்றும் நிர்மல்புர ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் கிராம உத்தியோகத்தர்கள் அச்சுறுத்தப்பட்டமை, கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை, எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மேற்க் கொண்டமை மற்றும் ஆலங்குடாவின் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் தாக்கப்பட்டமை ஆகிய காரணங்களை அடிப்படையாக கொண்டு அனர்த்த முகாமைத்துவ தத்தின் சகல கடமைகளிலும் இருந்து தற்காலிக விலகிக் கொள்ள தீர்மானித்துள்ளது என இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் கற்பிட்டி கிளையும் , அகில இலங்கை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் கற்பிட்டி கிளையும் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் நான்கு கிராம உத்தியோகத்தர்களும் ஒரு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரும் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.



No comments