புத்தளம் சிராம்பியடி எரிபொருள் நிலையம், சர்வதேச ஷெல் நிறுவனத்தின் இலங்கை கூட்டு நிறுவனமான "ஷெல் ஆர்.எம்.பார்க் பிரைவட் லிமிட்டடுடன்" கை கோர்த்துள்ளது.
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் நகரின் பிரபல தொழிலதிபரும், எஸ்.எச்.எம்.ஜப்ரிஸ் பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளருமான எஸ்.எச்.எம்.ஜப்ரிஸ் அவர்களின் புத்தளம் சிராம்பியடி எரிபொருள் நிலையம், சர்வதேச ஷெல் நிறுவனத்தின் இலங்கை கூட்டு நிறுவனமான "ஷெல் ஆர்.எம்.பார்க் பிரைவட் லிமிட்டடுடன்" கை கோர்த்துள்ளது.
இதற்கான உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு வெள்ளிக்கிழமை (19) காலை புத்தளம் சிராம்பியடி எரிபொருள் நிரப்பு நிலைய வளாகத்தில் இடம்பெற்றது.
எஸ்.எச்.எம்.ஜப்ரிஸ் பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் எஸ்.எச்.எம்.ஜப்ரிஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஷெல் ஆர்.எம்.பார்க் பிரைவட் லிமிட்டடின் நிறைவேற்று பணிப்பாளர் எல்.ஈ.சுசந்த சில்வா கலந்து கொண்டார்.
உலக புகழ் பெற்ற ஷெல் நிறுவனத்தின் இந்த அளப்பரிய சேவைகளை இலங்கை மக்கள் குறிப்பாக புத்தளம் வாழ் மக்கள் அடைந்து கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கிலேயே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக சிராம்பியடி எரிபொருள் நிலைய நிறைவேற்று பணிப்பாளர் எஸ்.எச்.எம்.ஜப்ரிஸ் தெரிவித்தார்.
இதன் ஆரம்ப நிகழ்வில் டெக்னோ குறூப் இணை இயக்குனர்களாக எஸ்.எச்.எம்.ஹாரிஸ், எஸ்.எச்.எம். ருவைஸ், எஸ்.எச்.எம்.ரியாஸ்,எஸ்.எச்.எம்.ஹாபி உள்ளிட்ட உலமாக்கள்,தொழில் அதிபர்கள், புத்தளம் 80 ஸ் சஹீரியன்ஸ் ஹீரோஸ் அங்கத்தவர்கள், புத்தளம் ஐக்கிய வர்த்தக நலன்புரிச்சங்கத்தினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.















No comments