Breaking News

அனைத்து பல்கலக்கழங்களுக்கு இடையிலான விளையாட்டு விழா

அரச பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு விழா நேற்று (04.09.2025) ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் ஆரம்பமானது. ஆரம்ப விழாவுக்கு இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் பிரதம அதீதியாகவும், அனைத்து பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள், பதிவாளர்கள், நிதியாளர்கள் மற்றும் முக்கிய பல்கலைக்கழக பிரமுகர்கள் கலந்துகொண்டனர். 


மாணவ, மாணவிகள் பங்குபற்றுகின்ற 24 விளையாட்டுக்கள் அடங்கிய இந்த போட்டி தொடரின் நிறைவு விழா எதிர்வருகின்ற 21.09.2025 திகதி நடைபெற உள்ளது.  


இதில் பேராதெனிய, கொழும்பு, மொரட்டுவ, ஸ்ரீ ஜயவர்த்தனபுர, களனி, ருகுணு, யாழ்ப்பாணம், கிழக்கு, தென்கிழக்கு, வயம்ப, ரஜரட்ட, சபரகமுவ, ஊவா வெல்லச, VPA, வவுனியா, GWU ஆகிய 16 அரச பல்கலைக்கழகங்களின் முழுநேர கல்வி பயிலும் மாணவர்கள் பங்குபற்றுகின்றனர். 


முகம்மத் இக்பால்   
உடற்கல்வி போதனாசிரியர் 

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்

















No comments