ஆலங்குடாவில் இடம்பெற்ற பெண்களின் உற்பத்தி பொருட் கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்.
(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சி்யாஜ்)
கற்பிட்டி ஆலங்குடா மரவஞ்சேனை ஒன்றிணைந்த கிராம அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் வடமேல் கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் பங்களிப்புடன் ஒரு வருட சுய தொழில் பயிற்சி சான்றிதழ் வழங்கலும் பெண்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சியும் ஆலங்குடா மரவஞ்சேனையில் கற்பிட்டி பிரதேச செயலகத்தின் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.ஜீ எஸ்.ஏ அபே றுவான் தலைமையில் இடம்பெற்றது.
ஆலங்குடா மரவஞ்சேனை ஒன்றிணைந்த கிராம அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த ஒரு வருட காலமாக இடம்பெற்ற
தையல், கேக் , பாபீஸ். நுளம்பு வலை , மலர் அலங்காரம் என 18 வகையான பயிற்சி நெறிகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டதுடன் பெண்களின் உற்பத்தி பொருட் கண்காட்சியும் இடம்பெற்றது
இந்நிகழ்விற்கு அமைப்பின் தலைவர் எம்.எஸ் றமீஸின் அழைப்பின் பெயரில் வடமேல் மாகாண கிராம அபிவிருத்தி காரியாலய அதிகாரிகள், புத்தளம் மாவட்ட காரியாலய அதிகாரிகள் , கற்பிட்டி பிரதேச செயலக காரியாலய உத்தியோகத்தர்கள் , வேர்ல்ட் விஷன் நிறுவனத்தின் கற்பிட்டி பிராந்திய திட்ட முகாமையாளர் சுபுன், செடோ ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஏ.ஆர் முனாஸ், மற்றும் பயிற்சி ஆசிரியர் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments