கற்பிட்டி ஜென்னத்துல் அஸாபீர் பாலர் பாடசாலையின் கால்கோள் விழா
(கற்பிட்டி செய்தியாளர் சியாஜ், புத்தளம் நிருபர் சனூன்)
கற்பிட்டி ஜென்னத்துல் அஸாபீர் பாலர் பாடசாலையின் புதிய மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழா பாலர் பாடசாலையின் அதிபர் எம்.ஜே.என் பாஹீமா தலைமையில் வெள்ளிக்கிழமை (31) பாலர் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வின் அதிதிகளாக கற்பிட்டி பிரதேச செயலகத்தின் பாலர் பாடசாலையின் பொறுப்பதிகாரி எம்.நிப்ராஸ், ஜென்னத்துல் அஸாபீர் பாலர் பாடசாலையின் ஆலோசகர் ஏ.ஆர்.எம் முஸாதீக், கிராம உத்தியோகத்தர்களான எம்.பீ.எம் அர்ஷத், பாத்திமா பர்வின் மற்றும் மஹ்தி பவுண்டேஷன் பணிப்பாளர் ஏ.ஆர்.எம் முஸம்மில் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments