Breaking News

வெளிநாட்டவர்கள் எங்களை பார்த்து சிரிக்கின்ற நிலையில்.

எமது நாட்டில் பட்டி தொட்டி தொடக்கம் பாராளுமன்றம் வரைக்கும் ஒருவரையொருவர் ஊழவாதிகள் என்று தொடர்ந்து குற்றம் சுமத்துவது வாடிக்கையாகிவிட்டது. ஊழல் என்பது பொதுவாக உலகநாடுகள் அனைத்திலும் நடைபெறுகின்ற ஒன்று என்பதனால் அதனை யாரும் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. 


ஆனால் தற்போது எமது நாட்டு அரசியல் தலைவர்களின் கல்வித் தகமைகள் பற்றிய கேள்விகளும், குற்றச்சாட்டுக்களும் எழுகின்ற காரணத்தினால் இது புதிய விடயமாக பார்க்கப்படுகின்றது.   


இதனை பார்த்துவிட்டு வெளிநாட்டவர்கள் எமது நாட்டின் அரசியல் தலைவர்கள் அனைவரையும் கேவலமாக பார்க்கின்ற நிலைமை உருவாகியுள்ளது. வெளிநாட்டில் நண்பர்கள் உள்ளவர்களுக்குத்தான் இதன் பாரதூரம் புரியும். 


எந்தவித ஊழலாக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மூலம் தண்டியுங்கள். அதைவிடுத்து சமூக வலைத்தளங்களில் ஒவ்வொருநாளும் திரும்பத் திரும்ப அதனையே பிரபல்யப்படுத்துவதன் மூலமாக ஒருவரை அவமானப்படுத்தலாமே தவிர தண்டனை வழங்க முடியாது.


இவ்வாறான செயற்பாடுகள் ஒட்டுமொத்த எமது நாட்டினையும் நாங்களே கேவலப்படுத்துவதாக அமைகின்றது. நல்லவர்களையும், திறமையானவர்களின் சான்றிதல்களையும் வெளிநாடுகளில் சந்தேகக்கண்கொண்டு பார்க்கின்ற நிலமை உருவாகிறது.  


அத்துடன் நாமல் ராஜபக்ச தனியான அறையில் பரீட்சை எழுதினார் என்பதானது எமது நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் தரத்தில் சந்தேகத்தை உண்டுபண்ணிவிடும். இது மல்லாக்க படுத்துக்கொண்டு துப்புவதற்கு ஒப்பானது. அவ்வாறு துப்புவது மீண்டும் எமது முகத்துக்கே வந்து சேர்ந்துவிடும். 


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




No comments

note