ஹிஸ்புல்லாக்களுடனான நெதன்யாகுவின் சமாதான அறிவிப்பும், அதன் உள்நோக்கமும்.
லெபனானை தளமாகக் கொண்டுள்ள ஹிஸ்புல்லாஹ் அமைப்புடன் சமாதான ஒப்பந்தத்தை இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பினால் இஸ்ரேலுக்கு தோல்வியென்றும், ஹிஸ்புல்லாஹ் வெற்றி பெற்றுள்ளது என்றும் பரவலாக கூறப்படுகின்றது.
இந்த போரில் இஸ்ரேல் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியவில்லை. அத்துடன் ஹிஸ்புல்லாக்கள் இஸ்ரேலின் தலையில் அடிப்பதனால் டெல்அவிவ் உட்பட வடக்கு இஸ்ரேல் முழுவதும் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், வடக்கு இஸ்ரேலில் உள்ள லட்சக்கணக்கான யூத குடியேற்றங்கள் இடம்பெயர்ந்துள்ளன.
போரியல்ரீதியில் இஸ்ரேல் தோல்வியடைந்து ஹிஸ்புல்லாஹ் வெற்றிபெற்றுள்ளது என்று கூறலாம் ஆனால் நெதன்யாகுவின் சமாதான சூழ்ச்சியை ஹிஸ்புல்லாஹ் முற்றாக ஏற்றுக்கொள்ளுமாக இருந்தால் அது இஸ்ரேலின் இராஜதந்திர வெற்றியாகும்.
ஹமாசுக்கு எதிரான தாக்குதலை நிறுத்தும்வரை இஸ்ரேலுக்கு எதிரான எங்களது தாக்குதல் தொடருமென்று ஹமாஸ் இயக்கத்தின் மறைந்த தலைவர் ஹசன் நசரல்லாஹ் கூறிவந்தார்.
ஹமாஸை அழிப்பதற்காக காசா பகுதியில் இஸ்ரேல் வான் மற்றும் தரை தாக்குதல்களை மேற்கொண்டபோது இஸ்ரேலின் ஒட்டுமொத்த கவனத்தையும், பலத்தையும் சிதறடித்து ஹமாசுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் லெபனானிலிருந்து ஹிஸ்புல்லாவும், ஏமனில் இருந்து ஹௌதிக்களும், ஈராக், சிரியாவிலிருந்து ஈரான் ஆதரவு பெற்ற இயக்கங்களும் இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடாத்தி வருகின்றன.
குறிப்பிட்ட இயக்கங்களின் இலக்குகள் மீது விமான தாக்குதல்களை நடாத்தி வந்தாலும் முழு அளவிலான போரை ஹமாசுக்கு எதிராக மாத்திரமே இஸ்ரேல் மேற்கொண்டு வந்தது.
தன்மீது தாக்குதல் நடாத்துகின்ற இயக்கங்களில் மிகவும் சக்திமிக்கதான ஹிஸ்புல்லாஹ்வின் தாக்குதலை தடுப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தும் அது இஸ்ரேலினால் முடியவில்லை. அதனால் முப்படைகளின் முழு அளவிலான தாக்குதலை நடாத்தி அழிவுகளை ஏற்படுத்தி, கட்டமைப்பை சிதைத்துவிட்டு சமாதன உடன்படிக்கை மூலமாக ஹிஸ்புல்லாக்களின் தாக்குதலை நிறுத்த முடியுமென்று இஸ்ரேல் திட்டமிட்டிருக்கலாம். அதனாலேயே ஹிஸ்புல்லாஹ் மீது முழு அளவிலான போரை நடாத்தியது.
அவ்வாறு ஹிஸ்புல்லாக்கள் நெதன்யாகுவின் சமாதானத்தை முழுமையாக ஏற்று யுத்தத்தை நிறுத்தினால், மறுபுறத்தில் தனது முழு சக்தியையும் பாவித்து ஹமாஸ் இயக்கத்தை முற்றாக அழிப்பதற்கு எந்தவித இடையூறுகளும் இருக்காது. இதைத்தான் இஸ்ரேல் எதிர்பார்க்கின்றது.
இஸ்ரேலை சுற்றிவர தாக்குதல் நடாத்திய போதிலும் அமேரிக்கா, பிரித்தானியா போன்ற வல்லரசு நாடுகளின் பலமான உதவிகளின் காரணமாக இஸ்ரேல் தொடர்ந்து போர்புரிந்து வருகின்றது.
எனவே நெதன்யாகுவின் சமாதான அறிவிப்பானது அவர்களுக்கான தோல்வி என்பதனை விட ஹமாஸை முற்றாக தனிமைப்படுத்துவதற்கான சூழ்சியாகும். அமெரிக்க, பிரான்ஸ் நாடுகளின் முயற்சியிலான இந்த சமாதானத்தின் உண்மைத்தன்மையை எதிர்வருகின்ற நாட்களில் உணர்ந்துகொள்ள முடியும்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
No comments