Breaking News

புத்தளம் தில்லையடி அல் காசிம் சிட்டி றிசாத் பதியுதீன் பாடசாலை மாணவர்கள் புத்தளம் பொது நூலகத்துக்கு விஜயம்.

(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)

புத்தளம் தில்லையடி அல் காசிம் சிட்டி  றிசாத் பதியுதீன் பாடசாலை மாணவர்கள் புத்தளம் பொது நூலகத்துக்கு நூலகத்தை பார்வையிடும் நோக்கில் திங்கட்கிழமை (22) காலை விஜயம் செய்தனர்.


பொது நூலகத்தில் அமையப்பெற்றுள் நூல் உசாத்துணை பகுதி, பத்திரிகை வாசிப்பு பகுதி, சிறுவர் பகுதி உள்ளடங்கலாக அங்கு அமையப்பெற்றுள்ள புத்தளம் நகர சபையின் சபா மண்டபத்தையும் மாணவர்கள் பார்வையிட்டனர்.


புத்தளம் பொது நூலகத்தின் பிரதம நூலகர் கே.எம்.நிஷாத், நூலக வளங்கள் தொடர்பாகவும், நூலகத்தை எவ்வாறு பயன்படுத்துவது தொடர்பாகவும் மாணவர்கள் மத்தியில் விளக்கமளித்தார்.








No comments

note