ஆலங்குடா அன்வாருல் உலூம் அரபுக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா.
(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)
கல்பிட்டி ஆலங்குடா அன்வாருல் உலூம் அரபுக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா அண்மையில் (29) ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலய வளாகத்தில் இடம்பெற்றது.
அரபுக் கல்லூரியின் ஸ்தாபகத் தலைவரும், உளநல வளத்துறை ஆலோசகருமான ஆசிரியர் எஸ்.எல்.எம்.மின்சார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிபர் உஸ்தாதுமார்கள், பெற்றார்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது "மரம் வளர்க்க கரம் கொடுப்போம்" அமைப்பின் ஸ்தாபக தலைவர் ஹாமித் எம். சுஹைப் அவர்களால் மாணவர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
No comments