கற்பிட்டி அல் அக்ஸா மாணவன் அப்துல்லாஹ் தேசிய ரீதியில் இடம்பெற்ற வாழ்த்து அட்டை போட்டியில் வெற்றி.
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் , புத்தளம் எம்.யூ.எம் சனூன்)
தேசிய கல்வி நிறுவகம் மற்றும் செனல் என்.ஐ.ஈ இணைந்து நடாத்திய தேசிய ரீதியிலான "புதிய எண்ணங்கள் வண்ணங்கள் வழியே " எனும் தொனிப் பொருளில் இடம்பெற்ற தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்து அட்டை வடிவமைத்தல் போட்டியில் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் இருந்து பங்கு பற்றிய ஒரே ஒரு மாணவனான தரம் 03 ஐச் சேர்ந்த எம்.ஏ அப்துல்லாஹ் வெற்றி பெற்று அவருக்கான பரிசு மற்றும் சான்றிதழை வெள்ளிக்கிழமை (26) மஹரகம தேசிய கல்வி நிறுவக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்வின் போது பெற்றுக் கொண்டதாக கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் அதிபர் எம்.என்.எம் நஸ்றீன் தெரிவித்தார்
போட்டியில் வெற்றி பெற்ற எம்.ஏ. அப்துல்லாஹ் ஆசிரியர்களான எம்.எம்.எம் அஜ்மல் ஆர்.எஸ் ஷகீலா தம்பதிகளின் புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments