JobVibe.lk - Sri Lanka Job Portal

நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையிருந்து தமிழ் தின போட்டியில் வலய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இருவர் பாராட்டி கௌரவிப்பு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

கோட்ட மட்டத்தில் இடம் பெற்ற 2024 ஆம் ஆண்டிற்கான தமிழ் தின போட்டியில் நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப  பாடசாலையில் தரம் 05 இல் கல்வி பயிலும் எம்.எப் பாத்திமா வாசிப்பு போட்டியிலும் மற்றும் எப்.ஏ அய்தா ஆக்கதிறன் வெளிப்பாடு போட்டியிலும்  வெற்றி பெற்று இருவரும் வலய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.எம் ஹுபைதா தெரிவித்துள்ளார்.


இவர்கள் இருவரையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையில் இடம்பெற்றது இதில் பாடசாலையின் அதிபர் எம்.எம் ஹுபைதா உதவி அதிபர் ஏ.ஆர்.எம் புவாஸ் மற்றும் இவர்களை பயிற்றுவித்த தஸ்லிமா ஆசிரியை ஆகியோரை படங்களில் காணலாம்.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال