Breaking News

கற்பிட்டி கப்பலடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக சறூக் பதவி ஏற்பு

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

கற்பிட்டி கப்பலடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் எம்.எம்.எம் நவ்ப்  இடமாற்றம் பெற்று சென்றமையினால் ஏற்பட்ட அதிபர் வெற்றிடத்திற்கு  அப்பாடசாலையில் ஆசிரியராக சுமார் நான்கு வருடங்களுக்கு மேல் கடமையாற்றி வரும் எம்.கே.எம் சறூக் இன்று (06) கப்பலடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபராக பதவி ஏற்றார்.


கற்பிட்டி கோட்டக் கல்வி பணிப்பாளர் தீப்தி பெர்ணாந்து முன்னிலையில் இடம் பெற்ற மேற்படி புதிய அதிபர் பதவி ஏற்பு வைபவத்தில் முன்னைய அதிபர் எம்.எம்.எம் நவ்ப், பாடசாலையின் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.







No comments

note