புத்தளத்தில் வலம்புரி சங்குகளுடன் இளைஞன் கைது...!
ரஸீன் ரஸ்மின்
புத்தளம் - பாலாவி பகுதியில் இரண்டு வலம்புரி சங்குகளை எட்டு இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய முயற்சித்த இளைஞர் ஒருவர் புத்தளம் பிரிவு குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வரகாபொல, புளத்கொஹூபிடிய பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பல வருடங்களுக்கு முன்னர் குறித்த வலம்புரிகளை கொழும்பில் தனது பெற்றோர் வாங்கி வீட்டில் வைத்திருந்ததாக சந்தேக நபர் விசரணையின் போது தெரிவித்துள்ளார்.
எனினும், அனுமதிப்பத்திரம் இன்றி குறித்த வலப்புரி சங்குகளை வைத்திருந்த குற்றத்திற்காக சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு வலம்புரியுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த புத்தளம் பிரிவு குற்ற விசாரணை பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
No comments