Breaking News

பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் காலி மாவட்ட கலந்துரையாடல்

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)

காலியில் உள்ள பெண்கள் மற்றும் இளைஞர்களை ஒன்றிணைத்து பெருந்தோட்டத் துறை மக்கள் குரல் அமைப்பு ஜனநாயகம்  ரீதியாக மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நல்லிணக்கத்தின் ஊடாக எவ்வாறு தீர்ப்பது தொடர்பான கலந்துரையாடல் பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அன்டனி ஜேசுதாஸன் தலைமையில் காலியின் செட்கோல் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


இதில் பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் செயற்திட்டப் பணிப்பாளர் லவீனா ஹஸன்தி, தேசிய செயற்திட்ட பொறுப்பாளர் பிரன்சிஸ் ராஜன், மாவட்ட இணைப்பாளர் ஆரோக்கியம் ஜெஸ்மன் ஆகியோர் கலந்து கொண்டனர் இரண்டாவது படிமுறையாக இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் தமிழ் மலையமக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் எவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும் என்பன தொடர்பாகவும் விரைவில் தென் மாகாணத்தின் காலி மாவட்டத்தில் ஆளுநர், அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளை அழைத்து நடாத்த உள்ள மாநாட்டுக்கான ஒரு முன்னேற்பாடாகவும் அமையப் பெற்ற மேற்படி கலந்துரையாடலில் மலையக மக்களுக்காக சிங்கள முஸ்லிம் மக்கள் முன்வைக்க உள்ள கோரிக்கைகள் அடங்கிய ஆவணமும் இதன்போது தயாரிங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.








No comments

note