பு/கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவிகளுக்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான பாடசாலை சீருடை அன்பளிப்பு!
புத்தளம் - தெற்கு கோட்டத்துக்குட்பட்ட கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவிகளுக்கு பாடசாலை சீருடை அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
பாடசாலையில் வறுமைக் கோட்டின் கீழ் கல்வி பயிலும் 100 மாணவிகளுக்கு சுமார் பத்து இலட்சம் பெறுமதியில் முழுமையான தைத்த பாடசாலை சீருடையை கொழும்பைச் சேர்ந்த ஜுரம்பதி குடும்பத்தினர் வழங்கியுள்ளனர்.
பாடசாலை அதிபர் எம்.எச்.எம். தௌபீக் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விஷேட அதிதியாக ஜுரம்பதி குடும்பத்தினர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு சீருடையை வழங்கி வைத்தனர். இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.ஏ. அஷ்ரப் மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து சிறப்பித்தனர்.
இதேவேளை கொழும்பைச் சேர்ந்த ஜுரம்பதி குடும்பத்தினர் மூன்றாவது முறையாக இதனை வழங்கியுள்ளனர். முதலாவதாக 5000 லீட்டர் நீர்த்தாங்கி (Water Tang) யும், சென்ற முறை 50 மாணவர்களுக்கு தைத்த சீருடையும், இம்முறை 100 மாணவிகளுக்கு தைத்த சீருடை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments