அரச அனுமதி பெற்ற சாரதி பயிற்றுவிப்பாளராக புத்தளத்திலிருந்து இப்லால் அமீன் தெரிவு.
கடந்த வருடம் பரீட்சைகள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட சாரதி பயிற்றுவிப்பாளர் போட்டிப் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்ததோடு, இவ்வாருடம் இடம்பெற்ற நேர்முகத் தேர்வு மற்றும் களப்பரிசோதனைகளில் சித்தி பெற்று அரச அங்கீகாரம் பெற்ற சாரதி பயிற்றுவிப்பாளராக இப்லால் அமீன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இப்லால் அமீன் புத்தளத்தில் இயங்கிவரும் OXFORD சாரதி பயிற்சி நிலையத்தின் பணிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments