எதிர்காலத்தை வெல்ல பெற்றோர்கள் குழந்தைகளின் அறிவின் மீது முதலீடு செய்யுங்கள் : கிழக்கின் கேடயம் பிரதானி எஸ்.எம் சபீஸ்
நூருல் ஹுதா உமர்.
இயந்திரங்கள் நாம் கொடுக்கும் தகவல்களை வைத்துக்கொண்டு வேகமாக இயங்குகின்றது. ஆனால் குழந்தைகளோ நாளாந்த நடைமுறைகளின் மூலம் அறிவினை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றார்கள். அதனால் உங்கள் குழந்தைகளின் மீது நீங்கள் முதலீடு செய்யுங்கள் என கிழக்கின் கேடயம் பிரதானியும், அக்கறைப்பற்று மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான எஸ் எம் சபீஸ் அட்டாளைச்சேனையில் நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது தெரிவித்தார்
மேலும் அவர் பேசுகையில், குழந்தைகள் மீது முதலீடு செய்வதென்றால் அவர்களுக்கு வங்கியில் பணம் போட்டு வைப்பதோ, அவர்களுக்கு சொத்து சேர்த்து வைப்பதோ கிடையாது. அவர்கள் அறிவினை பெற்றுக்கொள்ளகூடிய விதத்தில் பெற்றோர்கள் செலவுகள் செய்திடல் வேண்டும்.
உதாரணமாக எல்லாப்பிள்ளைகளுக்கும் சித்திரம் வரைவதனை கட்டாயமாக்கி அதன்மீது செலவிடுவதனால் அப்பிள்ளை நீலத்தையும் மஞ்சலையும் சேர்த்தால் என்ன கலர் வரும் என்பதை தேடிக்கற்றுக் கொள்ளும். ஆனால் நமது பிள்ளைகள் சுவரில் கீறிவிட்டது என்றால் நாம் எரிந்து விழுவோம். மாறாக அவர்களுக்கு முறையாக சித்திரம் வரையக்கூடிய பொருட்களை வாங்கிக் கொடுக்க மறந்து விடுகின்றோம். இவ்வாறு தான் கல்வி, விளையாட்டு, குர்ஆன் ஓதுதல், நடனமாடுதல் என பிள்ளைகளுக்கு தேவையானவற்றில் நாம் முதலீடு செய்ய வேண்டும்
நம்மால் தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்கு கூட எதிர்காலத்தில் அவர்கள் மிகவும் இலகுவான முறையில் தீர்வினைப் பெற்றுக்கொள்வார்கள். அதற்காக அவர்கள் மீது முதலீடு செய்யுங்கள். நீங்கள் இழந்ததை விடவும் பன்மடங்கை அவர்கள் சம்பாதிப்பார்கள் என தெரிவித்தார்.
No comments