கடையாமோட்டை தேசிய பாடசாலையின் உதைப் பந்தாட்ட அணியினருக்கு மேலங்கி, மற்றும் பணம் அன்பளிப்பு!.
புத்தளம் - கடையாமோட்டை மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யின் உதைப் பந்தாட்ட அணி தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவாகி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவிருக்கும் இறுதிப் போட்டிக்குச் செல்கின்றனர்.
பாடாசாலையின் அதிபர் எம்.எச்.எம்.தௌபீக் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவ்வணியினருக்கு சுமார் 53,000/= பெறுமதியான மேலங்கியை PALAVI TRANSPORT உரிமையாளர் அப்துல் நிஸார் அவர்கள் அன்பளிப்பு செய்தார்.
இதேவேளை உதைப்பந்தாட்ட அணியின் பிரயாண செலவுக்காக எம்.எப்.றிஸ்பிகான் அவர்களின் செல்வப் புதல்வர் ஆர்.எம்.சிமாக் மூலம் 10,000/= ரூபாவும், முன்னாள் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் என்.எம்.எம். ஹிஷாம் அவர்களின் செல்வப் புதல்வர் எச்.எம்.அஸீப் அம்லா மூலம் 10,000/= ரூபாவும், பாடசாலையின் பழைய மாணவரான எஸ்.ஹரவிந்தன் 10,000/= ரூபாவும் பாடசாலையின் அதிபரிடத்தில் வழங்கி வழியனுப்பி வைத்தனர்.
KMCC (NS) MEDIA UNIT
No comments