கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பிரியாவிடை வைபவமும், புத்தக வெளியீடும்.
பு/௧னமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பிரியாவிடை வைபவமும் , புத்தக வெளியீடு நாளை (17) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
பாடசாலையின் அதிபர் பீ.எம். முஸ்னி அவர்களின் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் அண்மையில் ஓய்வு பெற்றுச் சென்ற பாடசாலையின் முன்னாள் அதிபர் எஸ்.எம்.எம். ஹனிபா கௌரவிக்கப்படவுள்ளதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.
இதேவேளை அன்றைய தினம் புத்தக வெளியீடு இடம்பெறவுள்ளதோடு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்கலைக்கழகம் தெரிவாகியுள்ள மாணவர்களை பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினால் கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது..
இந்நிகழ்வினை பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம், பழைய மாணவியர் சங்கம் ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments