Breaking News

மதுரங்குளி மீடியாவின் பரிசளிப்பு விழாவும், கௌரவிப்பு நிகழ்வும்

புனித  ரமழான் மாதத்தில் இடம்பெற்ற இஸ்லாமிய வினா - விடை போட்டி நிகழ்ச்சியில் பங்கு பற்றி அதிஷ்டசாலிகளாக தெரிவு செய்யப்பட்டவர்கள் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்டு பணப் பரிசில்கள் வழங்கும் நிகழ்வும், 2022 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும்  கடந்த  (13)  மதுரங்குளி தொடுவா வீதியில் அமைந்திருக்கும் ட்ரீம் செண்டரில் அதிபர் என்.எம்.எம். நஜீப் தலைமையில்  விமர்சையாக இடம்பெற்றது.


இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அவர்களும், விஷேட அதிதியாக   மாஹோ கல்விப்பணி மனையின் கல்விப் பணிப்பாளர் ஆர்.எம்.ஐ.எம். அலிஜின்னா அவர்களும், கௌரவ அதிதிகளாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் மற்றும்  அதிதிகளாக முன்னாள் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் கே.௭ம்.எம்.பைஸர் மரிக்கார்,  முந்தல் - மதுரங்குளி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவர் ஏ.எச்.எம்.ஹாரூன், மற்றும் ISRC அமைப்பின் பணிபாளர் முஹம்மத் மிஹ்ளார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


இந்நிகழ்வில் 11 பாடசாலைகளில் இருந்து தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற சுமார் 40 மாணவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, ஓய்வு பெற்ற அதிபர்களான பு/ கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.எம்.எம்.ஹனிபா, பு/ஸ்ரீ கிருஷ்ணா தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் கே.தொண்டமான் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.


இதேவேளை புனித  ரமழான் மாதத்தில் இடம்பெற்ற இஸ்லாமிய வினா - விடை போட்டி நிகழ்ச்சியில் பங்கு பற்றி அதிஷ்டசாலிகளாக தெரிவு செய்யப்பட்டவர்கள் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்டு முதலாம் பரிசாக 75,000/= ரூபாவும், இரண்டாம் பரிசாக 50,000/= ரூபாவும், மூன்றாம் பரிசாக 25,000/= ரூபாவும் மேலும் ஆறுதல் பரிசாக 5,000/= ரூபா வீதம் 10 அதிஷ்டசாலிகள் குலுக்கல் முறையில் தெரிவுசெய்யப்பட்டு பணப் பரிசு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


MAURANKULIMEDIA.





























No comments