Breaking News

மொ/பகினிகஹவெல முஸ்லிம் மத்திய கல்லூரியிலிருந்து சட்டத்துறைக்கு செல்லும் மாணவி எம் .ஆர். நிப்லா

98 வருட கால கல்லூரியின் கல்விப்பணியில் சட்டத்துறை செல்லும் முதல் மாணவியாக துல்பிகா ஆசிரியை மற்றும்  றியால் அவர்களின் அன்புப் புதல்வியான எம்.ஆர். நிப்லா பாடசாலையின் வரலாற்றில் சாதனை படைத்துள்ளார்..


இம்மாணவி மொ/பகினிகஹவெல முஸ்லிம் மத்திய கல்லூரியில் தரம் 1-13 வரை கல்வி  கற்று,  கடந்த க.பொ.த(உ/த) பரீட்சையில் சிறந்த பெறுபேறைப் பெற்ற மாணவியாவார். அப்பெறுபேற்றின் அடிப்படையில் கொழும்பு பல்கலைக்கழக சட்டத்துறை பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். 


மொ/பகினிகஹவெல மத்திய கல்லூரி மாணவன் எம்.நௌவாப்தீன் வயம்ப பல்கைல கழகத்தின் பௌதீக விஞ்ஞான பீடத்திற்கும்,எம்.ஆர்.ரிம்சாத்  கிழக்கு பல்கலைக்கழகத்தின் கணினி விஞ்ஞானத்துறைக்கும்,  எம்.ஆர். ஸாதிகா சித்த வைத்திய துறைக்கும் ,எம்.எஸ்  சஹ்லா தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உயிரியல் விஞ்ஞான பிரிவிற்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


இதேவேளை எம்.ஏ. அஸ்மா பேராதனை பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்திற்கும், எம்.எப். பஹ்மிலா கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலை பீடத்திற்கும்,  எம்.என். அஸ்பா பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்திற்கும்,  எம்.எ.பஸ்லா கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்திற்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


மேலும் இம்மாணவர்களின் பின் நின்று உழைத்த ஆசியர்கள், நன்கொடையாளர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் அனைவரும் நன்றி தெரிவித்துள்ளனர்.


மொ/பகினிகஹவெல மத்திய கல்லூரியிலிருந்த பல்கலைகழகம் செல்லும் மாணவச் செல்வங்களை அதிபர், உட்பட ஆசியர்கள் வாழ்த்துகின்றனர்.


ஏ.எச்.எம் சிஹார் 

பகினிகஹவெல, மொனறாகலை




No comments

note