Breaking News

புத்தளம் நகர முதல்வர் எம்.எஸ்.எம். ரபீக் விடுத்திருக்கும் விஷேட அறிவித்தல்!.

சடுதியாக அதிகரித்து வரும் கொரோனா பெருந் தொற்றிலிருந்து எமது நகரைப் பாதுகாப்பதற்கான சில பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நகரபிதா எம்.எஸ். எம். ரபீக் அவர்கள் அறிவித்துள்ளார். 


1.வீடுகளில் மரணிக்கும் ஜனாஸாக்களுக்கு அரசினால் pcr பரிசோதனைக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளபோதிலும் குளிப்பாட்டும்போது உரிய சுகாதார வழிமுறைகளை பேணும்படி அதாவது குளிப்பாட்டும் நபர்கள்  முகக் கவசம் அணிதல் மற்றும் கையுறை அணிந்து உடல் முழுவதையும் மறைக்கக் கூடிய ஆடையை அணிந்து மிக பாதுகாப்பான முறையில் ஜனாஸாவைக் குளிப்பாட்ட வேண்டும். 


2.நகரசபையின் புத்தளம் மாவட்ட விளையாட்டரங்கத் தொகுதியின் உள்ளக விளையாட்டரங்கு, நீச்சல் தடாகம், உடற்பயிற்சிக்கூடம் என்பன மறு அறிவித்தல் வரும் வரை நாளை(18) முதல் மூடப்படுகிறது. 


3.ஞாயிறு வாராந்த சந்தை எதிர்வரும் ஞாயிறு முதல் தொடர்ந்து 3 வாரங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் தினச் சந்தைக்கு தினமும் வெளியூர்களிலிருந்து வர்த்தக  நடவடிக்கைகளுக்காக வரும் தின சந்தை வியாபாரிகளுக்கும்  தடை விதிக்கப்பட்டுள்ளது.


எமது நாட்டில் கொரோனா பரவல் நிலைமை மிகத் தீவிரமாக காணப்படுவதாலும் நமது ஊரிலும் தற்போது நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி மரண வீதங்கள் அதிகரிப்பதாலும் பொதுமக்கள் மிகுந்த  அவதானத்துடனும் சமூக பொறுப்புடனும் நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.


எம்.எஸ்.எம்.ரபீக்

நகரபிதா

புத்தளம்.




No comments